நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள், ஆஷூரா போன்ற தினங்களைக் கொண்டாடுவதோ அல்லது அவற்றை விழாக்களாக மாற்றுவதோ மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பண்டிகைகள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் மட்டுமே என ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.
மீலாது விழா (மவ்லித்) மற்றும் ஆஷூரா போன்ற காலங்களில் குடும்பத்தினர் ஒன்று கூடுவதன் மார்க்க நிலைப்பாடு.
கேள்வி 20889
மீலாது விழா, ஆஷூரா போன்ற பல்வேறு காலங்களிலும் மற்றும் பெருநாட்களிலும் எங்களது ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் - அதாவது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் - ஒன்றாகக் கூடி, அமர்ந்து உண்பது மார்க்க ரீதியாகக் கூடுமா? இத்தகைய காரியங்களைச் செய்பவர்களின் மார்க்கச் சட்டம் என்ன? அதேபோன்று, ஒருவர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த (ஹிஃப்ழு செய்து முடித்த) பிறகு, அதனைக் கொண்டாடும் விதமாக குடும்பத்தினர் ஒன்று கூடி உண்பதன் மார்க்கச் சட்டம் என்ன?
Summary of answer
பதில்
Table Of Contents
மார்க்க அனுமதி பெற்ற பெருநாட்களில் குடும்பத்தினர் ஒன்று கூடுதல்
மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்ட பெருநாட்களிலும் (நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள்), ஏனைய மகிழ்ச்சியான தருணங்களிலும் சகோதரர்கள், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்திப்பதும், ஒன்றாகக் கூடி மகிழ்வதும் நிச்சயமாக மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடிய, அன்பை வளர்க்கக்கூடிய மற்றும் இரத்த உறவுகளைப் பலப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த காரியங்களாகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இருப்பினும், இத்தகைய குடும்பக் கூட்டங்களின் போது நிகழக்கூடிய பல திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டுதல்களுக்கு முற்றிலும் முரணான பல நாசகாரியங்களும் இடம்பெறுகின்றன. அவற்றுள் முக்கியமானது:ஆண்களும் பெண்களும் விலக்கின்றி ஒன்றாகக் கலந்திருப்பது ஆகும், நெருங்கிய உறவினர்களாகவோ அல்லது பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளாகவோ இருந்தபோதிலும் சரியே(அது அனுமதிக்கப்படாத விடயமே). இச்செயலானது பார்வைகளைத் தாழ்த்துதல், பெண்கள் தமது ஆடை அலங்காரங்களை வெளிப்படுத்தாமல் இருத்தல், அந்நிய ஆண்கள் பெண்களுடன் தனித்திருப்பதைத் தடுத்தல், அந்நியப் பெண்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்தல் போன்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும் அனைத்துக் காரணங்களையும் மார்க்கம் தடுத்துள்ளதற்கு முற்றிலும் எதிரானதாகும்.
நெருங்கிய உறவினர்களுடன் இத்தகைய விவகாரங்களில் கவனயீனமாக இருப்பதன் ஆபத்தைக் குறித்து நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்வருமாறு கடுமையாக எச்சரித்துள்ளார்கள்: [அந்நியப் பெண்கள் இருக்கும் இடங்களுக்குள் நீங்கள் நுழைவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அப்போது அன்சாரிகளில் ஒரு மனிதர் எழுந்து, 'அல்லாஹ்வின் தூதரே! கணவனுடைய நெருங்கிய உறவினர்கள் (மைத்துனர்கள் போன்றோர் நுழையும் விவகாரம்(அல்ஹம்வு)) குறித்துத் தங்களது கருத்து என்ன?' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்: [அத்தகைய உறவினர்கள் மரணத்திற்குச் சமமானவர்கள் (அதாவது மிக ஆபத்தானவர்கள்)] என்று பதிலளித்தார்கள் (நூட்கள்: ஸஹீஹுல் புகாரி 4934, ஸஹீஹ் முஸ்லிம் 2172). இமாம் லைத் பின் ஸஃத் அவர்கள் விளக்குகிறார்கள்: (அல்ஹம்வு) என்பது கணவனின் சகோதரர் (மைத்துனர்) மற்றும் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் போன்ற கணவனின் நெருங்கிய உறவினர்களைக் குறிக்கும் (இதுவும் முஸ்லிம் கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது).
(ஆண்-பெண் கலப்பு குறித்த கூடுதல் விபரங்களுக்குக் கேள்வி எண்: 1200-க்கான பதிலைப் பார்வையிடலாம்).
நபியவர்களின் பிறந்தநாள் மற்றும் ஆஷூரா காலங்களில் ஒன்று கூடுதல்.
நபியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதோ, அல்லது ஆஷூரா போன்ற நாட்களை முன்னிட்டுப் பிரத்தியேகமாக ஒன்று கூடுவதோ, அல்லது அந்நாட்களை மக்கள் கொண்டாடுவதற்கான ஒரு பருவகால விழாவாகவோ அல்லது பெருநாளாகவோ மாற்றுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று அல்ல. இஸ்லாமிய மார்க்கத்தில் பெருநாட்கள் என்பது இரண்டு மட்டுமே; அவை நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகியவையாகும் என்பதை நபியவர்கள் காட்டித் தந்ததன் அடிப்படையில் நாம் ஏற்கனவே பலமுறை தெளிவாக விளக்கியுள்ளோம்.
(இது குறித்த கூடுதல் விபரங்களுக்குக் கேள்வி எண்கள்: 5219, 10070 மற்றும் 13810 ஆகியவற்றைப் பார்வையிடவும்; மேலும் ஆஷூரா கொண்டாட்டத்தின் மார்க்கச் சட்டம் அறியக் கேள்வி எண்: 4033-க்கான பதிலைப் பார்க்கவும்).
திருக்குர்ஆனை முழுமையாக மன்னம் செய்து முடித்தவரைக் கொண்டாடுதல்
ஒருவர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்ததற்காகக் குடும்பத்தினர் ஒன்றாகக் கூடி உணவளிப்பதும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் - இன்ஷா அல்லாஹ் - மார்க்க ரீதியாக எவ்விதத் தவறும் இல்லாத ஒரு காரியமாகும். இது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட பித்அத்தான கொண்டாட்டங்களுக்குள் அடங்காது. ஆனால், இதற்கென ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்து, அதனை ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் கொண்டாடக்கூடிய ஒரு 'வருடாந்திரப் பெருநாளாக' மாற்றிவிடக் கூடாது என்ற நிபந்தனை இதற்கும் அவசியமாகும்.
குறிப்பாக, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தவர் சிறிய வயதுக் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இத்தகைய பாராட்டு நிகழ்வுகள் மார்க்க ரீதியாக இன்னும் கூடுதல் பலமும் முக்கியத்துவமும் பெறுகின்றன. ஏனெனில், அது அக்குழந்தையை மனரீதியாக உற்சாகப்படுத்துவதற்கும், தான் மனனம் செய்த குர்ஆனைத் துல்லியமாகப் பேணிப் பாதுகாப்பதில் அவனது உறுதியை அதிகப்படுத்துவதற்கும் மற்றும் அதனை அலட்சியப்படுத்தி மறந்துவிடாமல் இருப்பதற்கும் மிகச் சிறந்ததொரு ஊக்கமாக அமையும்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
மூலம்:
இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்