தாயத்துகள் மற்றும் அவற்றைக் கட்டுதல் போன்றவற்றின் சட்டங்கள்
தாயத்து அணிதல் ஆகுமானதா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது தொடர்பாக தவ்ஹீத் நூலையும் பிலால் பிலிப்ஸ் எழுதிய சில நூல்களையும் வாசித்துள்ளேன். எனினும் முவத்தா ஹதீஸ் நூலில் சில தாயத்து வகைகளை ஆகும் எனக் கூறும் ஹதீஸ்களைப் படித்தேன். ஸலபுகளில் சிலர் அவற்றை அனுமதித்துள்ளதாக தவ்ஹீத் நூலில் உள்ளது. இந்த ஹதீஸ்கள் முவத்தா பாகம் ஐம்பதில் நான்கு, பதினொன்று மற்றும் பதிநான்காம் இலக்க ஹதீஸ்களில் வந்துள்ளது. இதற்கான பதிலையும் இந்த ஹதீஸ்களின் நம்பகத்தன்மை பற்றியும் இத்தலைப்பு தொடர்பான மேலதிக விடயங்களையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி.