0 / 0
314/முகர்ரம்/1446 , 20/ஜூலை/2024

மறுமை நாளின் சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள்

கேள்வி: 78329

மறுமை நாளின் சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள் யாவை!?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

மறுமை நாளின் அடையாளங்கள் மறுமை நிகழ்வதற்கு முன்பு ஏற்படும், மறுமை நாள் நெருங்கி வருவதை உணர்த்தும்.

அவை பெரும்பாலும் சிறியவை பெரியவை என இருவகைகாளாக கருதப்படுகின்றன. மறுமை நிகழ்வதற்கு பல நாட்களுக்கு முன்பு இவை ஏற்படும்.

அவற்றுள் சில நடந்து முடிந்தவை - அவை மீண்டும் ஏற்படலாம்-  மற்றும் சில, வெளிப்பட்டு விட்டன, அவை தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

மேலும் சில, இன்றுவரையிலும் ஏற்படவில்லை. என்றாலும் அவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போல ஏற்ப்பட்டே தீரும்.

பெரிய அடையாளங்களை பொறுத்தவரை, அவை பிரமாண்டமான அளவில் உண்டாகுபவை, அவை உண்டாக்குவது, மறுமை நாள் நெருங்கி விட்டது அது ஏற்படுவதற்கு சிறிது காலம் மாத்திரமே இருக்கிறது என்பதை உணர்த்தும்.

சிறிய அடையாளங்களை பொறுத்தவரை, அவை அதிகம் இருக்கின்றன. அது பற்றி பல ஸஹீஹான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.

அவற்றை ஹதீஸ்களை குறிப்பிடாமல் கூற முயல்கிறோம், ஹதீஸ்களுடன் கூறுவதற்கு இச் சந்தர்ப்பம் இடம் கொடுக்காது.

இத்தலைப்பில்  ஆதாரங்களுடன் விரிவாக பார்க்கவேண்டும் என்பவர்கள், இது தொடர்பாக எழுதப்பட்ட ஆதாரப்பூர்வமான நூல்களை படிக்கலாம்‌. உதாரணத்திற்கு அறிஞர் உமர் சுலைமான் அஷ்கர் அவர்களுக்குரிய "அல்கியாமா அஸ்ஸுக்றா" என்ற நூல் , அறிஞர் யூஸுப் அல் வாபிbல்  அவர்களுக்குரிய "அஷ்ராதுஸ் ஸாஆ" என்ற நூல்.

சிறிய அடையாளங்களில் உள்ளடங்குபவை பின்வருமாறு;

01- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பப்படல்.

02- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தல்.

03- பைதுல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படல்

04- அம்வாஸ் எனும் பகுதியில் (பலஸ்தீனத்தில் உள்ள ஓர் ஊர்) ஏற்படும் கொள்ளை நோயின்.

05- பணம் பெருகி தர்மம் கொடுப்பதின் தேவை இல்லாமல் போதல்.

06. குழப்பங்கள் ஏற்படுதல்,

இஸ்லாத்தின் ஆரம்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களில் உஸ்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டது, ஜமல் மற்றும் ஸிப்fபீன் யுத்தம், ஹவாரிஜ்களின் தோற்றம், ஹர்ரா யுத்தம் மற்றும் குர்ஆனின் படைக்கப்பட்டது என்ற கருத்து போன்றன உள்ளடங்கும்.

07- பொய் நபித்துவ தோற்றம் ,

உதாரணமாக முஸைலமா அல் கத்தாப், அல் அஸ்வத் அல் அனஸி போன்றோர்.

08- ஹிஹாஸ் நெருப்பு, 654 ஹிஜ்ரி அதாவது ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த நெருப்பு ஏற்பட்டது. இக்காலத்தில் வாழ்ந்த மற்றும் அதற்கு பின்னர் வந்த அறிஞர்கள் இது பற்றி விவரிக்கையில்,  இமாம் நவவி (ரஹ்) கூறுகிறார்கள் " எங்களது காலத்தில் -654 ஹிஜ்ரி-  மதீனாவில் நெருப்பு உருவாகியது. ஹர்ரா என்ற பகுதிக்கு பின்புறமாக மதீனாவின் கிழக்கு பக்கத்தில் இருந்து மிகப் பெரிய அளவிலான நெருப்பாக உருவாகியது. இது தொடர்பான தகவல் ஷாம் மற்றும் ஏனைய சில நாடுகளில் பல காலமாக அறியப்பட்டு வந்தது. அந்த நிகழ்வைப் பார்த்த மதீனாவில் உள்ள சிலர் எனக்கு அறியத் தந்தனர்‌.

09- நம்பிக்கை மோசடி , தகுதி இழந்தவர்களிடம் மக்கள் பொறுப்புகளை ஒப்படைப்பது இதில் உள்ளடங்கும்.

10- அறிவு கைப்பற்றப்படல், மடமை ஓங்குதல, அறிவு அறிஞர்களின் மரணத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது. (ஹதீஸில் இடம் பெற்றது போன்று)

11- விபச்சாரம் பரவுதல்.

12- வட்டி அதிகரித்தல் .

13- இசைக் கருவிகள் தோன்றுதல்.

14- மது அதிகரித்தல்.

15- இடையர்கள் உயர் கட்டிடங்களை கட்டி பெருமையை வெளிப்படுத்துதல்.

16- அடிமை எஜமானியை பெற்றுடுத்தல்.

17- கொலை அதிகரித்தல்.

18- பூகம்பம் அதிகரித்தல்.

19- பூமி சிலரை உள்வாங்குதல், முகங்கள் மாற்றம் பெறுதல், கற்கள் வீசப்படல்.

20- அறைகுறை ஆடை அணியும் நிர்வாணிகள் தோன்றுதல்.

21- முஃமினின் கடவு உண்மையாகுதல்.

22- பொய் சாட்சியம் அதிகரித்து உண்மையை மறைத்தல்.

23-  பெண்கள் அதிகரித்தல்.

24- அரபிகளின் நிலம் தோப்புகளாகவும் நதிகளாகவும் மாற்றம் பெறுதல்.

25- புராத் நதி தங்க மலையாக மாறுதல்.

26- சடப்பொருள்கள் மற்றும் வேட்டை மிருகங்கள் மனிதர்களுடன் உரையாடுதல்.

27- ரோமர்கள் அதிகரித்தல் முஸ்லிம்களுடன் போர் புரிதல்.

28- இஸ்தான்புல் வெற்றி கொள்ளப்படல்.

பெரிய அடையாளங்களில் உள்ளடங்குபவை பத்து இருக்கின்றன என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபா பின் உஸைத் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் கூறியுள்ளார்கள்.

தஜ்ஜால் வருகை,  ஈஸா நபி (அலை) அவர்களின் வருகை, யஃஜூஜ் மஃஜூஜ் வருகை, மூன்று பூகம்பங்கள், (கிழக்கிலும் மேற்கிலும் மற்றும் அரேபிய தீபகற்பத்திலும்), புகை மூட்டம் உருவாக்குதல், மேற்கில் சூரியன் உதயமாகுதல், ஒரு வகை அதிசய பிராணி தோன்றுதல், ஒன்றுசேரேம் இடத்திற்கு கொண்டு  செல்லும் தீப் பிளம்பு, இந்த அனைத்து அடையாளங்களும் தொடர்ந்து இடம்பெறும். ஆரம்பமாக ஒன்று ஏற்பட்டவுடன் ஒன்றன் பின் ஒன்றாக நிகழும்.

1 – புகை மூட்டம்

2 – தஜ்ஜால்

3 – (அதிசயப்) பிராணி

4 – சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 – ஈஸா (அலை) இறங்கி வருவது

6 – யஃஜுஜ், மஃஜுஜ்

7 – கிழக்கே ஒரு பூகம்பம்

8 – மேற்கே ஒரு பூகம்பம்

9 – அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 – இறுதியாக ஏமனி’லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162

இவை இதே ஒழுங்கில் தான் நிகழும் என்பதற்கான எந்த ஸஹீஹான சான்றுகளும் இல்லை.

அறிஞர் முஹம்மத் ஸாலிஹ் உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது ,

இந்த மறுமை நாளில் பெரிய அடையாளங்கள் சொல்லப்பட்ட ஒழுங்கிலா நிகழும் என கேட்கப்பட்டது.

பதில்: சில ஒழுங்கு முறைப்படியும் மற்றும் சில மாற்றமாகவும் நிகழும் அதன் ஒழுங்கு கூறப்படவில்லை.

ஒழுங்கு முறைப்படி நிகழ இருக்கும் அடையாளங்கள் ஈஸா நபி (அலை) இறங்குதல், யஃஜூஜ் மஃஜூஜ் வருகை, தஜ்ஜால் வருகை,

தஜ்ஜால் அனுப்பப்பட்டதும் ஈஸா நபி அலை அவர்கள் வந்து அவனை அளிப்பார்கள் பின்னர் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அளிப்பார்கள்.

இமாம் ஸபாராயினி (ரஹ்) அவர்கள் அவரது நூலில் இவ்வடயாளங்கள் நிகழ்வதை ஒழுங்கு படுத்தியுள்ளார்கள். அவற்றுள் சில பொருத்தமாகவும் சில பொருத்தமற்றதாகவும் இருக்கும். ஒழுங்கு முறை எமக்குத் அத்தியாயம் இல்லை.

அவசியம் யாதெனில் மறுமை நாளுக்கு சில பிரமாண்டமான அடையாளங்கள் உள்ளன, அவை ஏற்பட்டுவிட்டால் மறுமை நெருங்கி விடும். என்பதை அறிந்து வைத்திருப்பதுதான்.

ஏனெனில் அது மிகப்பெரும் நிகழ்வு, அவற்றின் பால் மக்கள் எப்பொழுதும் அவதாரமாக இருத்தல் அவசியம்.

நூல்: மஜ்மூஉல் பதாவா (2/கேள்வி இல 137)

அல்லாஹ் நன்கறிந்தவன்.

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android
மறுமை நாளின் சிறிய மற்றும் பெரிய அடையாளங்கள் - இஸ்லாம் கேள்வி & பதில்