சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
126/முகர்ரம்/1446 , 01/ஆகஸ்ட்/2024

மாதவிடாய் மற்றும் மகப்பேறு உதிரம்

கேள்வி: 68810

(கால அளவை விட கூடிய உதிரப்போக்கு) இஸ்திஹாழா வுடன் சம்பந்தப்பட்ட சட்டங்கள் என்ன..!?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

(68818) இலக்க கேள்விக்கான பதிலில், எப்போது இரத்தம் மாதவிடாயாகவும் இஸ்திஹாழாவாகவும் (கூடிய உதிரப்போக்கு) கணிக்கப்படும், என்ற விடயமும், மாதவிடாய் சட்டங்கள், இஸ்திஹாழா (கூடிய உதிரப்போக்கு) சட்டங்கள் பற்றிய தெளிவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று மாதவிடாய் பற்றிய சில முக்கியமான சட்டங்கள் (70438) இலக்க கேள்விக்கான பதிலில் கூறப்பட்டுள்ளன.

இஸ்திஹாழா சட்டங்களை சுத்தம் சார்ந்த சட்டங்கள் எனக் கூறலாம். இஸ்திஹாழா  பெண்ணிற்கும் (கால அளவை விட கூடிய உதிரப்போக்கு ஏற்படும் பெண்) தொடக்கிலிருந்து சுத்தமாகிய பெண்களுக்குமிடையில் பின்வரும் சில அம்சங்களைத் தவிர வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை.

1- அவள் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழுச் செய்ய வேண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பாத்திமா பின்த் அபி ஹுபைஸ் (ரழி) அவர்களுக்கு "நீர் ஒவ்வொரு தொழுகைக்கும் வுழுச் செய்துகொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார்கள் இந்த செய்தியை இமாம் புகாரி அவர்கள் இரத்தத்தை கழுவுதல் என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்துள்ளார்.

அதாவது நேரம் குறிக்கப்பட்ட தொழுகைக்கு நேரம் நுழைந்த பிறகு வுழுச் செய்ய வேண்டும். ஏனைய தொழுகைக்கு தொழும்போது வுழுச் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

2- அவள் வுழுச் செய்ய நாடினால் இரத்தத்தின் அடையாளத்தை கழுவுதல் வேண்டும், இரத்த கசிவைத் தடுக்க மறைவிடத்தில் (யோனி துவாரம்) கோடன் போன்ற துணியை பயன்படுத்த வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் ஹமனா (ரழி) பெண்மணிக்கு  " நான் உமக்கு கோடன் துணியை (பயன்படுத்த) விவரிக்கிறேன் அது இரத்தக்கசிவை குறைக்கும்" என்றார்கள் (அதற்கு அப் பெண்மணி) அதைத்தாண்டி அதிகமாக இரத்தம் வெளியாகுதே என்று கூற நபியவர்கள் "ஆடையைப் பயன்படுத்தலாம்" என்று கூறினார்கள் மீண்டும் அப் பெண்மணி அதைத்தாண்டி அதிகமாக இரத்தம் வெளியாகுதே என்று கூற நபியவர்கள் " (இயன்றளவு) இரத்தம் வெளிவருவதை தடுக்கும் விதமாக செயல்படுங்கள்" என்று கூறினார்கள்.

அதன் பின்னர் வெளியாகுவதால் அவளுக்கு சட்டரீதியான எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பாத்திமா பின்த் அபி ஹுபைஸ் (ரழி) என்ற பெண்மணிக்கு " நீர் மாதவிடாய் காலங்களில் தொழுகையை தவிர்ந்துகொள்ளுங்கள், பின்னர் குளித்துவிட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் வுழுச் செய்து தொழுது கொள்ளுங்கள். தொழுகை விரிப்பில் இரத்தம் சொட்டினாலும் பரவாயில்லை" என்று கூறினார்கள்.

நூல் :  (முஸ்னத் அஹ்மத் , ஸுனன் இப்னு மாஜா)

3- அவள் உடலுறவு வைத்துக் கொள்ளல், இஸ்லாமிய அறிஞர்கள், உடலுறவை விடுவதன் மூலம் விபச்சாரத்தின் பக்கம் சாயாமல் இருப்பதாயின், உடலுறவு வைத்துக்கொள்ளவது ஆகுமானதா என்பதில் கருத்து வேற்றுமை கொண்டுள்ளனர்.

ஏற்புடைய நிலைபாடு யாதெனில் அவள் பொதுவாகவே உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.

பொதுவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் காலத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட அதிகமான பெண்களுக்கு இஸ்திஹாழா இரத்தம் வெளியேறும். அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் தடுக்கவுமில்லை. மாறாக அல்லாஹ் "பெண்களை மாதவிடாய் காலங்களில் தவிர்ந்து கொள்ளுங்கள். " என்று கூறியது ஏனைய சந்தர்ப்பங்களில் அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு ஆதாரமாக அமையும்.  தொழுகையே அவளுக்கு செல்லுபடியாகிறது என்றிருந்தால் உடலுறவு வைத்துக் கொள்வது சாதாரண அம்சம். அத்தோடு மாதவிடாய் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சட்டத்தை இஸ்திஹாழா பெண்ணுடன் ஒப்பீடு செய்வது தவறாகும். இஸ்திஹாழா பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வது தடை என்று கூறும் அறிஞர்களிடம் கூட இவ்விருவரும் இது விடயத்தில் ஒன்றாக நோக்கப்படுவதில்லை.

வேறுபாட்டுடனான ஒப்பீடு (கியாஸ்) ஒருபோதும் நிலைபெறாது.

மூலநூட்கள்

மூலம்

இஸ்லாம் கேள்வி பதில் இணையதளம்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android