சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
221/முகர்ரம்/1446 , 27/ஜூலை/2024

ஒரு 'ரக்அத்'தைப் பெற்றுக்கொள்வது எப்படி?

கேள்வி: 22155

ஒரு மனிதர் பள்ளிக்குள் வந்து தொழுகையில் இணையும் போது இமாம் 'ருகூஉ'விலிருந்து எழுந்து (ஸுஜூதுக்குச் செல்வதற்கு) "அல்லாஹு அக்பர்" சொல்லவில்லையாயின் அது அவருக்கு ஒரு 'ரக்அத்'தைப் பெற்றுக்கொண்டவராகக் கருதப்படுவாரா?

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

இமாம் 'ருகூஉ' நிலையில் இருக்கும் போது இணைந்து கொள்கின்ற 'ம ஃமூம்' தொடர்பாக மூன்று நிலைகள் காணப்படுகின்றன.

  1. அவர் நின்றுகொண்டே இஹ்ராம் தக்பீரைக் கட்டி, பின்னர் இமாம் ருகூஉவில் இருக்கும் போதே அவர் ருகூஉ  செய்வார். இந்த நிலையில் அவர் இமாமுடன் இணைந்து அந்த 'ரக்அத்'தை அடைந்து கொண்டவராவார்.
  2. இமாம் 'ருகூஉ'வில் இருக்கும்போது 'தக்பீரதுல்-இஹ்ராம்' கட்டிக்கொள்வார். ஆனால், 'ருகூஉ'வுக்குச் செல்லும் போது இமாம் 'ருகூஉ' விலிருந்து நிமிர்ந்து விட்டால் இமாமுடன் சேர்ந்து அந்த 'ரக்அத்'தை அடைந்தவராகக் கருதப்படமாட்டார். அவர் அந்த 'ரக்அத்தை கழா செய்ய (எழுந்து தொழுது பூரணப்படுத்த) வேண்டும்.
  3. 'தக்பீரதுல்-இஹ்ராம்' காட்டாமல் நேரடியாக 'ருகூஉ'வுக்கு செல்தல். இந்நிலையில் அவரது தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவரது தொழுகை பாத்தில் (باطل) ஆகிவிடும். ஏனெனில், அவர் தொழுகையின் அர்கான் -கடமைகளில் ஒன்றை விட்டுவிட்டார். அதுதான் 'தக்பீரத்துல்-இஹ்ராம்' ஆகும்.

சட்டத்துறை இமாம்கள், தொழுகையில் இமாம் 'ருகூஉ'வில் இருக்கும்போது இணைந்து கொண்டால், "ருகூஉவை அடைந்து கொண்டவர் அந்த 'ரக்அத்'தைப் பெற்றுக்கொண்டவராவார்" என்ற நபிமொழிக்கு ஏற்ப அவர் அந்த 'ரக்அத்'தைப் பெற்றுக்கொண்டவராவார் என்பதில் ஏகோபித்த கருத்தில் உள்ளனர்.  அபூதாவூதில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை இமாம் அல்-பானீ அவர்கள் இர்வாஉல்-ஃஙலீல் (496) கிரந்தத்தில் ஸஹீஹ் எனக் குறிப்பிடுகின்றார்கள். அதே நூலில் பக்கம் 262 இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: "பெருந்தொகையான ஸஹாபாக்களின் செயற்பாடுகளும் இந்த ஹதீஸைப் பலப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டுக்கள் பின்வருமாறு:

முதலாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்கள்: "யார் இமாம் 'ருகூஉ'வில் இருக்கும் போதே இணைந்து கொள்ளவில்லையோ அவர் அந்த 'ரக்அத்'தை அடைந்தவராகமாட்டார்".... (இதன் அறிவிப்பாளர் தொடர் (ஸனத்) ஸஹீஹானதாகும்).

இரண்டாவது:

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறியுள்ளார்கள் : "இமாம் 'ருகூஉ'வில் இருக்கும் போது நீங்கள் இணைந்துகொண்டு, இமாம் நிமிர்வதற்கு முன்னர் உங்கள் முழங்காலில் நீங்கள் கைகளை வைத்து விட்டால் நீங்கள் அந்த 'ரக்அத்'தை அடைந்து கொண்டீர்கள்".  (இதன் அறிவிப்பாளர் தொடர் (ஸனத்) ஸஹீஹானதாகும்).

மூன்றாவது:

ஸைத் இப்னு ஸாபித் (ரலி) கூறியுள்ளார்கள்: "யார் இமாம் 'ருகூஉ'விலிருந்து தலையை உயர்த்த முன்னர் இணைந்துகொண்டாரோ அவர் அந்த 'ரக்அத்'தை அடைந்தவராவார். (இதன் அறிவிப்பாளர் தொடர் (ஸனத்) நல்லதாகும்). " முற்றும்.

பார்க்க : மவ்ஸூஅத்துல்-பிக்ஹிய்யா அல்-குவைத்திய்யா (23/133) மற்றும் அல்-முஃஹ்னீ (1/298).

மூலநூட்கள்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android