சேமி
  • புதிய பட்டியல்
மேலும்
    சேமி
    • புதிய பட்டியல்
922/ரபி/1446 , 25/செப்டம்பர்/2024

பெண்கள் தமது முடிகளைக் கத்தரித்தலும், முகத்தின் முடிகளை நீக்குவதும்

கேள்வி: 13744

முஸ்லிம் பெண்களைப் பற்றி ஒரு ஆய்வை எழுதிக் கொண்டிருக்கின்றேன். முஸ்லிம் பெண்ணின் முடிகள் தொடர்பான சட்டங்களை அறிய விரும்புகின்றேன். ஒரு முஸ்லிம் பெண் தன் இரு தோல்புயங்களுக்கு சமமாகும் வரை முடியைக் கத்தரிக்கலாமா? அல்லது கூடாதா? முகத்தில் முளைக்கும் முடிகளின் சட்டம் என்ன? அதை நீக்கி விடுவது தடுக்கப்பட்டுள்ளதா? பதிலை எதிர்பார்க்கின்றேன். அவ்வாறே நான் ஈமானில் உறுதியாக இருக்க துஆ செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றேன்.

பதில்

அல்லாஹ்வுக்கே புகழும், இறைவனின் தூதர் மீது பிரார்த்தனையும் சாந்தியும் உண்டாகட்டும்,

மகத்தான அல்லாஹ்விடம் உங்களது ஈமானை அதிகரிக்குமாறும், உங்கள் உள்ளத்தை விரிவுபடுத்துமாறும் கேட்கின்றோம்.

உங்களது கேள்வியில் இரண்டு விவகாரங்கள் உள்ளடங்கியுள்ளன:

1. தலைமுடியை கத்தரிப்பதன் சட்டம். இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 

பெண் தனது முடியைக் கத்தரிப்பது தொடர்பாக நாம் எதையும் அறியவில்லை. சிரைப்பது தான் தடுக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு உங்கள் முடியை சிரைக்கமுடியாது. ஆனால் நீளமாகவோ, அதிகமாகவோ இருந்தால் கத்திரிக்கலாம். அதில் ஏதும் பிரச்சினை இருப்பதாக நாம் அறியவில்லை. ஆனால் அது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் திருப்தி தரும், அழகான விதத்தில் அமைந்திருப்பது அவசியம். அவ்விடயத்தில் நீங்கள் கணவருடன் ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். ஆனால் அவ்வாறு கத்தரிக்கும் போது காபிரான பெண்ணுடன் ஒப்பாகும் விதத்தில் இருக்கக் கூடாது. மேலும், முடி நீண்டதாக இருப்பதால் கழுவுதல், வாருதல் போன்ற சிரமங்களும் இருக்கும். எனவே அது நீளமாகவோ, அதிகமாகவோ இருந்தால் அதற்காக வேண்டி ஒரு பெண் கொஞ்சம் கத்தரிப்பதில் எந்தத் தவறும் கிடையாது. அல்லது அவ்வாறு கத்தரிப்பதில் தானோ தன் கணவனோ விரும்பும் அழகு இருக்குலாம். அப்போது கத்தரிப்பதில் எந்தக் குற்றமும் கிடையாது. ஆனால் முழுமையாக முடியைக் குறைப்பது நோயின் காரணமாகவே தவிர அனுமதிக்கப்படமாட்டாது. அல்லாஹ் அருள் புரிவான்! (பார்க்க : பதாவால் மர்அதில் முஸ்லிமா 2-515)

அபூ ஸல்மா இப்னு அப்துல் ரஹ்மான் என்பவரைத் தொட்டும் ஸஹீஹ் முஸ்லிமின் ஒரு அறிவிப்பில் இவ்வாறு வந்துள்ளது “நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்துவிடுவார்கள்.” (முஸ்லிம் : மாதவிடாய் பற்றிய பாடம் : 320)

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: “இந்த ஹதீஸில் பெண்கள் தமது தலைமுடியைக் குறைக்கலாம் என்பதற்கான ஆதாரம் உள்ளது.”

ஆனாலும் ஒரு பெண் முடிகளைக் கத்தரிக்கும் போது, நிராகரிக்கும் பெண்கள் அல்லது கெட்ட பெண்களுக்கு ஒப்பாவதைத் தவிர்க்க வேண்டும்.

ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் அவர்கள் கூறுகின்றார்கள், “ஒரு பெண் தனது பின்புறத்தில் உள்ள முடிகளை கத்தரித்துவிட்டு, இரு பக்கமும் உள்ள முடிகளை நீளமாக விட்டு விடுவது கூடாது. ஏனெனில் அவளுக்கு அழகைத் தரும் முடியை அவள் அலங்கோலப்படுத்தி, சிதைத்து விடுகின்றாள். அதில் காஃபிரான பெண்களுக்கு ஒப்பாவது உள்ளது. இதேபோன்றுதான் காபிரான பெண்கள் மற்றும் மிருகங்களின் பெயர்கள் உள்ள பல்வேறுபட்ட வெட்டுதல் முறைகளும். உதாரணமாக “டயானா” என்று காஃபிரான பெண்ணின் பெயரிலுள்ள வெட்டுதல் முறை, அல்லது “சிங்கம்” என்ற பெயரில் உள்ள வெட்டும் முறை, அல்லது “எலி” என்ற பெயரில் உள்ள வெட்டும் முறை. ஏனெனில் நிராகரிப்பாளர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒப்பாவது தடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பெண்ணுக்கு அழகைத் தரும் தலைமுடி வீணாக சிதைக்கப்படுகின்றது.

(பார்க்க : பதாவல் மர்அதில் முஸ்லிமா 2-516,517)

2. முகத்தின் முடிகளை நீக்குவது

முஹம்மத் ஸாலிஹ் பின் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்,

“வழமைக்கு மாற்றமான முடிகளாய் இருந்தால், அதாவது வழமையில் முளைக்காத இடங்களில் முளைத்திருந்தால், (உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு மீசை முளைத்தல், அல்லது கன்னங்களில் முடிகள் முளைத்தல்) அப்போது முடிகளை நீக்குவதில் குற்றம் கிடையாது. ஏனெனில் அது வழமைக்கு மாற்றமானது. அது பெண்ணை அலங்கோலப்படுத்துகின்றது.”

(பார்க்க : பதாவல் மர்அதில் முஸ்லிமா 2-536,537)

ஒரு பெண் முகத்தின் முடிவடை நீக்குவது பற்றி “அல்லஜ்னதுத் தாஇமா” எனப்படும் பத்வாக் குழுவிடம் கேட்கப்பட்ட போது இவ்வாறு பதில் அளித்தார்கள், “ஒரு பெண் மீசை, தொடை, கை, முழங்கால் முடிகளை நீக்குவதில் தவறில்லை. இது தடுக்கப்பட்ட “முடிநீக்கல்” அல்ல.

(பதாவா அல்லஜ்னதுத் தாஇமா 5-194,195)

“அல்லஜ்னதுத் தாஇமா” எனப்படும் பத்வாக் குழுவிடம் இவ்வாறு கேட்கப்பட்டது:

ஒரு பெண் தனது உடம்பில் உள்ள முடிகளை நீக்குவதன் சட்டம் என்ன? அவ்வாறு கூடுமாக இருந்தால் அதைச் செய்வது யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது?

அதற்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டது:

“தலை மற்றும் புருவ முடிகளை தவிர ஏனைய முடிகளை நீக்க அனுமதி உண்டு. இவ்விரண்டையும் முழுமையாக நீக்க முடியாது. புருவ முடிவுகளில் ஒரு சில பகுதிகளையாவது சிரைப்பது கொண்டோ அல்லது வேறு ஏதாவது விதத்திலோ நீக்க முடியாது. அதை அவளாகவோ அல்லது அவளது கணவரோ செய்வார்கள். அல்லது அவரது மஹரம்களில் ஒருவரோ, வேறொரு பெண்ணோ - வெளிக்காட்டுவது அனுமதியுள்ள பகுதிகளில் மாத்திரம் - செய்யலாம்.

(பதாவா அல்லஜ்னதுத் தாஇமா 5-194)

கட்டாயமாக மறைக்க வேண்டிய பகுதிகளின் முடி, தொடைகளின் முடி என்பவற்றை இன்னும் ஒரு பெண்ணோ, மஹ்ரமான ஆணோ பார்ப்பது கூடாது.

இரு புருவங்களினதும் முடியை முழுமையாகவோ சில பகுதிகளையோ சிரைப்பது அல்லது கத்தரிப்பது அல்லது அவற்றை முழுமையாகவோ ஒரு பகுதியையோ நீக்கும் பதார்த்தங்களைப் பாவிப்பது தடுக்கப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்த “நம்ஸ்” எனப்படுவது இதுவே. “நாமிஸா” எனப்படுபவள் அலங்காரமாகக் கருதி, தன் புருவங்களின் முடியை முழுமையாகவோ சிலதையோ நீக்கி விடுபவள். “முதனம்மிஸா” எனப்படுபவள் அவ்வாறு செய்துவிடப்படுபவள். இதுதான் மனிதர்களுக்கு ஏவுவதாக சைத்தான் பொறுப்பெடுத்துள்ள “அல்லாஹ் படைகோலத்தை மாற்றுதல்” 

மேலதிக விபரங்களுக்கு “அல்பதாவல் ஜாமிஆ லில்மர்அதில் முஸ்லிமா (3/877-879) எனும் நுலைப் பார்க்கவும்.

மூலநூட்கள்

மூலம்

அஷ்ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித்

எழுத்து வடிவமைப்பு விருப்பங்கள்

at email

செய்திமடல்

தள செய்திகள் மற்றும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பெற அஞ்சல் பட்டியலில் இணையவும்

phone

இஸ்லாம் கேள்வி பதில் செயலி

உள்ளடக்கத்தை விரைவாக அணுகவும் ஆஃப்லைன் உலாவலுக்கும்

download iosdownload android